யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

349shares

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் வெளியிட்டுள்ள விடயம்,

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 416 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், யாழ். மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஐவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்கள் எனவும் ஏனைய இருவரும் ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய மூவரில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு