கொரோனா தடுப்பூசி பெறுவதில் இலங்கை முறையான ஒழுங்குமுறைகளை வழங்கவில்லை! இந்தியா பதில்

53shares

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இதுவரை இலங்கை வழங்கவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது தடுப்பூசி தொகுதி பூட்டான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான அனுமதியை இலங்கையிடம் இருந்து எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் ஷீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசினால் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!