இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
மல்லவகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை - இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.