நேரடியாகச் சென்று பார்வையிட்ட கருணா! நிச்சயம் செய்து முடிப்பேன் - மக்களிடம் விடுத்துச் சென்ற வேண்டுகோள்

719shares

மழை காலத்து வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் மட்டக்களப்பு கிரான் பாலத்தை நிருமாணிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார் என பிரதமரின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்குரிய இணைப்பாளர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிரான் பாலத்திற்கு நேரடி விஜயம் செய்து வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட பாலத்தின் நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கெருத்துத் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் காலத்தில் கிரான் பாலம் அமைப்பதற்குரிய அளவுத்திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்கு 1200 மில்லியன் தேவை எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அரசாங்கம் மாறிய பின்பு இந்தப்பாலம் நிருமாணிக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு இப்பாலம் ஒரு அத்தியாவசியத் தேவையாகும். ஏனெனில் இப்பாலத்தை அமைத்தால்தான் எதிர்காலத்தில் சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை போன்ற பல இடங்களை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க முடியும்.

இதனைக் கருத்திற் கொண்டு இதில் பாலம் நிர்மாணிப்பதற்குரிய ஆயத்தங்களை நாங்கள் தற்போது மேற்கொண்டிருக்கின்றோம். அதற்குரிய அமைச்சரிடம் உரிய விபரக்கோவைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடையம் தொடர்பில் பிரதம மந்திரியுடன் உரையாடியுள்ளோம், மிகவிரைவில் ஜனாதிபதியுடனும் உரையாடவுள்ளோம்.

இதேவேளை சந்திவெளி மற்றும் முறக்ககொட்டஞ்சேனை போன்ற இடங்களில் கட்டவேண்டும் என கிராமங்களுக்குள்ளான வேறுபாடுகளிலும், பிரிவினைகளிலும் செயற்படுகின்றனர். சந்திவெளியில் பாலம் கட்டுவதற்கு கிரானூர் மக்கள் ஒருபோதும் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அங்கு பாலம் கட்டுவது என்றால் அதையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

கிரானில் பாலம் கட்டுவதை நிறுத்தி சந்திவெளியில் பாலம் கட்டுவதைத்தான் மக்கள் விரும்பவில்லை, ஆனால் இரண்டு இடங்களிலும் பாலம் அமையப் பெறலாம், அப்போதுதான் எமது மாவட்டம் வளற்சியடையும். இதில் அனைத்து மக்களும் மகிழ்வாகவும் தெளிவாகவும் இருக்குமாறு நாம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை