பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை, கடுமையாக மோசமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியிலேயே, பிரதமர் ஊடகப் பிரிவு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இடையே சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் விதம் குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.