விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
போர்க்காலத்தில் அவர் கிழக்கின் முன்னணி களப்பகுதியில் பணியாற்றியுள்ளதுடன் தற்போது விசேட அதிரடிப்படையின் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வருகிறார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்த உட்பட முக்கிய அதிகாரிகள் சென்ற ஹெலிகொப்டர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான நெடுங்கேணி காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானதை அடுத்து அவர்களை அரசாங்க கட்டுப்பாட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்ததில் முக்கிய பங்காற்றியவர் இவராவார்.
தற்போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக வருண ஜெயசுந்தர கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.