இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

0shares

13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை ஒழிப்பதாக இருந்தால், தமக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பன தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை ஒழிப்பதாக இருந்தால், தமக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பன தமக்கு வழங்கப்பட வேண்டும் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் , இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக அபிவிருத்தி செய்வதை எதிர்த்தால், அதனை நிறுத்த நேரிடும் எனவும் ஆனால் முனையத்தை அபிவிருத்தி செய்வது அவசியம் எனில் வெளிநாட்டு முதலீடு தேவை எனவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதி நாட்டில் இல்லை. இதனை அபிவிருத்தி செய்ய இலங்கையிடம் பணமில்லை. இதற்கு காரணம் வேறு எதுவுமில்லை 2015 ஆம் ஆண்டு 7.3 வீத பொருளாதார அபிவிருத்தியுடன் நாங்கள் கையளித்த அரசாங்கத்தை கொரோனா இன்றி, யுத்தமின்றி நல்லாட்சி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3.2 வீதமாக குறைத்து எங்களிடம் கையளித்ததே இதற்கு காரணம்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதை எதிர்த்தால், அதனை அப்படியே வைத்துக்கொண்டு பழைய முனையத்தின் ஊடாக வேலைகளை செய்து அபிவிருத்தி செய்யாது இருக்க வேண்டும். இதன் மூலம் நாட்டுக்கு பெரிய வருமானம் கிடைக்காது.

எப்போதாவது முடிந்த நேரத்தில் அபிவிருத்தி செய்துகொள்ள முடியும். அதுவும் சிறந்த முறை. ஆனால், அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் முதலீடு தேவை என்பது மிகவும் தெளிவானது.

இந்த முதலீட்டை செய்ய போவது இந்தியாவா, ஜப்பானா, சீனாவா, இங்கிலாந்தா என்பது வேறு விடயம். இதனை எதிர்த்தால் நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால், கால வரையறைக்குள் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை