முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

0shares

முதன்முறையாக, இலங்கை அரசாங்கம் விடுதலை புலிகள் செய்ததாக கூறப்படும் 600 போர்க்குற்றங்கள் குறித்த ஆவணமொன்றை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆவணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை முயற்சி செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவம் போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வேளையில் விடுதலை புலிகள் புரிந்ததாக கூறப்படும் குற்றங்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விமான எதிர்ப்பு ஏவுகணையால் 55 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை அழித்தது, 120 அரசியல்வாதிகளை கொன்றது. மற்றும் இராணுவம், கடற்படை வீரர்களைக் கொன்றமை, காமினி திசாநாயக்க, ராஜீவ் காந்தி படுகொலை உட்பட பல குற்றங்கள் குறித்த தகவல்கள் இந்த ஆவணத்தில் உள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை