தமிழ் மக்கள் கெளரவமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு ஆட்சி அதிகாரங்கள் அவர்களது கைகளில் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமை மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்து அரசியல் யாப்பில் முன்வைப்பட வேண்டிய யோசனைகள் குறித்து இன்று கலந்துரையாடியது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.