ஜெனீவாவில் இன்று தொடங்கும் ஐ.நா மனித உரிமை அமர்வுகளில் இலங்கை அரசு சண்டை இல்லாமல் சரணடையாது என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அமர்வில் இலங்கை தனது கவலைகளை ‘தர்க்கரீதியாகவும் உண்மைகளுடனும்’ தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெப்ரவரி 24 ம் திகதி மனித உரிமைகள் பேரவையில் முறையாக வழங்கப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் மைக்கல் பச்லெட்டின் அறிக்கை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறும் 46 வது அமர்வில் மனித உரிமைகள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் குறித்த தனது பதிவை இலங்கை பாதுகாக்க உள்ளது, மேலும் இது ஒரு கடினமான நேரம் என்று ஒப்புக் கொண்ட கொலம்பேஜ், இலங்கை சண்டை இல்லாமல் சரணடைய தயாராக இல்லை என மீளவும் வலியுறுத்தினார்.