கண்டியில் போலி பெண் வைத்தியர் கைது

0shares

கண்டியில் போலி வைத்தியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வைத்தியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து 47 வயதுடைய போலி பெண் வைத்தியர் ஒருவர் கண்டி பொலிஸாரால் நேற்று (22) கைது செய்யப்பட்டார்.

தனது பெயரில் போலி மருத்துவ பதிவு சான்றிதழைத் தயாரித்து கிளினிக் ஒன்றை திறந்து மருத்துவராக கடமையாற்றி வருவதாக குறித்த பெண் வைத்தியர் முறைப்பாடளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை