சர்வதேச நடைமுறைகளை சரியாக பின்பற்றுங்கள் - இலங்கையை நெருக்கும் சீனா

0shares

இலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளுக்கான காற்று - ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையை செய்துள்ளது. எனினும் இந்தியா அதனை ஆட்சேபித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எனினும் இது மக்களின் நலன்களுக்கு எதிரானது என்று சீன நிறுவனம் கூறியுள்ளளது.

எனவே எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் "மூர்க்கத்தனமான தலையீட்டையும்" சட்டரீதியான மற்றும் உண்மை அடிப்படையில் எதிர்ப்பதாக குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனமான சியோன்சொர்-இடென்வின் ஜேவி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச விலைமனுக்கோரல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று நிறுவனம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு