கொழும்பு அரசியலில் பரபரப்பு -ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகள் இரகசிய சந்திப்பு?

0shares

கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.ஆட்சியை தீர்மானிக்கும் இரண்டு சக்திகளின் இரகசிய சந்திப்பே அதுவாகும்.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்குமிடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இருவருக்கிடையேயான சந்திப்பில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் இன்னும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகாவில்லை.

நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்தாலும் மங்கள சமரவீர இன்னும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஓயவில்லை. சஜித் அணியுடனான உறவும் நன்றாக இல்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பஸில் -மங்கள சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளதா என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பீரிஸ் மற்றும் சாகர காரியவசம் ஆகியோரிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த தகவலை அவர்கள் நிராகரிக்கவில்லை.

“எங்களுக்கு தெரிந்தவரை அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றிருக்காது. இருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அந்தவகையில் சந்தித்திருக்கவும் கூடும்.” – என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை