கிழக்கில் பதிவான கொரோனா மரணம்!

0shares

திருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என திருகோணமலை சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அடப்பனாவெட்டை பகுதியைச் சேர்ந்த நபரொருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கிண்ணியா தள வைத்தியசாலையில் நீரிழிவு, குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடம்பனாவெட்டை பகுதியைச் சேர்ந்த நாகூரான் வயது 72 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை