சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையின சமூகம் ஒன்றிணையும் தருணம் இதுவே!

0shares

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்புத் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதில், சிறுபான்மை கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் சிறுபான்மையின சமூகத்தவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதற்கான ஓர் தருணம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிடம் மலையக மக்கள் முன்னணி அண்மையில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், மூன்று உப ஜனாதிபதிகள் நியமிக்க வேண்டுமென அந்தக் கட்சி வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், ஏனைய சிறுபான்மை கட்சிகளும் மேலதிகமாக தங்களுடைய யோசனைகளை முன்வைக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு இன்னமும் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகவும், முஸ்லிம்கள் தங்களுடைய இறுதி மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், மலையக மக்கள் தங்களுக்கான உரிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காகவும், போராடி வருவதை அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.

எனவே நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் எந்த விடயத்தையும் வெற்றி கொள்ள முடியாமல் போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது புதிய அரசியல் யாப்பை அமைப்பதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நிபுணர் குழுவின் ஊடாக சிறுபான்மை மக்கள் பயனடைந்துக் கொள்ள வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு