ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு!

0shares

ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பிரமுகரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

அவ்வப்போது இவ்வாறான தகவல்கள் கிடைக்கும். அவை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

மேலும் தேவையான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். சில தகவல்களை வெளிப்படையாக குறிப்பிடமுடியாது. ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை