p2p பேரணியில் பங்கேற்ற மட்டு. சிவில் சமுக செயற்பாட்டாளரிடம் இரண்டு மணிநேர தீவிர விசாரணை

0shares

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர் சிவயோகநாதனிடம் 2 பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் மட்டக்களப்பு திராய்மடுவில் உளள அவருடைய வீட்டுக்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

கிழக்கில் மட்டக்களப்பு, திருக்கோவில் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து வருகைதந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவயோகநாதனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா,பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா,கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

முற்பகல் 11.மணி தொடக்கம் பகல் 1மணி வரை இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்