மட்டக்களப்பில் ஆசிரியை விடுத்த பகிரங்க மிரட்டல்! பதற்றத்தில் மாணவர்கள்

0shares

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையின் ஆசியை ஒருவர் மாணவனுக்கு தொலைபேசியூடாக கடுமையான மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் இயங்கும் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் இரசாயனவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் அதே பாடசாலையில் கற்கும் மாணவனுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுத்துள்ளார்.


குறித்த மாணவன் ஆசிரியையின் மகனுடன் சண்டை போட்டதாகத் தெரிவித்தே இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார். எனினும் முன்னரும் பலதடவைகள் தனது மகனுடன் தகாத வார்த்தைகளால் பேசியதகவும், இருப்பினும் தான் எதனையும் கண்டுகொள்ளாது விட்டிருந்ததாகவும் அதன் போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் தொலைபேசியில் மாணவனின் தாயிடம் பேசும் போது மகனை கட்டுப்படுத்தி வைக்காதிருந்தால் உங்கள் மகன் உங்களுக்கு இல்லைனெ நினைத்துக்கொள்ளுங்கள் எனவும், இவ்வாறான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் உங்களது மகனை பாடசாலையிலிருந்து மட்டுமல்லாது, மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தே இல்லாமால் செய்து விடுவேன் எனவும் கடும் தொனியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆசிரியையின் இவ்வாறான செயற்பாடு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்களும், பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.

தந்போது மட்டக்களப்பில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியை இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளமை தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.சி தமிழின் செய்திப் பிரிவு குறித்த பாடசாலையின் அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

அவ்வாறான சம்பவம் உண்மை தான் எனவும், இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு கல்வித் திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான நடவடிக்கையை திணைக்கள அதிகாரிகளே மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை, மாணவனுக்கு மிரட்டல் விடுத்துள்ள குரல்பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாகவும் அதற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறும் முகப்புத்தகங்களில் பதிவுகள் இடப்பட்டுள்ளன.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை