பாகிஸ்தான் – ஸ்ரீலங்கா இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து!

0shares

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்ளிட்ட தூதுக்குழு பாகிஸ்தான் பிரதமருடன் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளைய தினம் (புதன்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்திக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு