தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் - இம்ரான் எச்சரிக்கை

0shares

ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

கட்டாய ஜனாஸா தகனத்துக்கு எதிரான தேசிய இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நிபுணர் குழுவும் ஜனாஸாக்களை அடக்கமுடியும் என கூறிய பின்பும் அரசு அனுமதி தராதது கண்டனத்துக்குரியது. இதற்கான அனுமதி பெற பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த அரசு வேண்டுமென்றே இதற்கான அனுமதியை மறுக்கிறது. அதுவும் பிரதமர் நாடாளுமன்றத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியும் என கூறிய பின்பும் பிரதமரின் கூற்றை கூட பொய்யாக்கும் அரசின் நிலைப்பாடு பிரதருக்கு மேலே அரசை இயக்கும் இனவாத சக்தி உள்ளது என்பதுக்கு சிறந்த உதாரணம்.

இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமரை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திக்க கூடாது என்பதுக்கான சகல முயற்சிகளையும் அரசு மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாகவே அவரின் நாடாளுமன்ற உரையும் ரத்துசெய்யப்பட்டது. அதன்பின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்டு கூட்டாக கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தோம்.

தற்போது பாதுகாப்பு காரணங்கள் என கூறி அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைக்கிறது.

ஆகவே இந்த அரசு ஜனாஸாவை அடக்க அனுமதி அளிக்கும் மனநிலையில் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.ஆனால் அனுமதி கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!