2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாக்குதலின் இரண்டாவது ஆண்டை நினைவுகூரும் அதேசமயம், இன்று 4ஆம் திகதி நடைபெறும் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் மற்றும் பரிசுத்த வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடன் இணைந்து முப்படை வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிநேர செய்தித் தொகுப்பு,