புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சியில் ஆரம்பமானது “சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை”!

0shares

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று கண்டாவளையில் ஆரம்பமானது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் மற்றும் மக்களிற்கு மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையிலும் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தை இன்று கண்டாவளையில் ஆரம்பமானது.

இன்றும் நாளையும் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள புளியம்பொக்கனை சந்தியில் குறித்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலாளரின் தலைமையில் குறித்த சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும், கண்டாவளை பிரதேச செயலகமும் இணைந்து குறித்த சந்தையை அமைத்துள்ளனர். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதுடன், பொது மக்கள் சித்திரை புத்தாண்டை வரவேற்கும் வகையில் மலிவான விலையில் பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு