கோட்டாபய அரசை மக்கள் ஏன்‘பெயில்’ என கூறுகின்றனர்?

0shares

“ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஆட்சிக்கும் எதிராக சேறு பூசி வருகின்றன. நாம் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என திட்டுகின்றனர். நாம் வேலை செய்தாலும் அது வௌியில் கொண்டு செல்வது குறைவாக இருக்கிறது. அது ஒரு குறைபாடாக உள்ளது. அனால்தான் இந்த அரசாங்கம் பெயில் என கூறுகின்றனர்" என ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனிப்பட்ட வேலைகள் இருந்தும் நேரத்தை ஒதுக்கி கிராமங்களுக்கு வருவது மக்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யவே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டுவஸ்நுவர - நல்லுர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை இன்றோ நாளையோ பிறக்கவுள்ளது. கஸ்டப்பட்டு நேரத்தை ஒதுக்கி இங்கு வந்தேன். உண்மையில் பல வேலைகள் இருந்தும் தனிப்பட்ட தேவைகளை தள்ளி வைத்துவிட்டு இங்கு வந்தது உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால்தான்.

ஆனால் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தமக்கும் தமது குடும்பத்திற்கும் ஆட்சிக்கும் எதிராக சேறு பூசி வருகின்றன. நாம் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என திட்டுகின்றனர். நாம் வேலை செய்தாலும் அது வௌியில் கொண்டு செல்வது குறைவாக இருக்கிறது. அது ஒரு குறைபாடாக உள்ளது.

அதனால்தான் இந்த அரசாங்கம் பெயில் என கூறுகின்றனர்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மைக் காலமாக குருநாகல் மாவட்டத்தில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு ரோஹித்த ராஜபக்ஷ அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின்னர் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினராக ரோஹித்த செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு