ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் வாகனத்தை சேதப்படுத்திய தேரர் கைது

0shares

கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளின் உரிமைகளுக்காக இன்றுகாலை போராட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது" சிங்கலே அபி" அமைப்பின் தலைவரான ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் உள்ளிட்ட குழு இன்று காலை கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடத்திய போராட்டத்தின் போது பொலிஸாரின் ஜீப் வண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ள நிலையில் சட்டவிரோத கூட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேரருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தேரர் நாளையதினம் கோட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு