யாழ் மண்ணின் நாட்டியப் பேரொளி சுவிஸ் மண்ணில்!!

460shares

'ஆடல் வல்லான் அற்புதக் கோலமே அகிலத்தின் ஆதாரம்' எனப் போற்றப்படும் நடனக் கலையை தாயகத்தில் மிளிரச் செய்த பிரபல நடன ஆசிரியை ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரன் அவர்கள், சுவிற்சலாந்தில் இடம்பெறவுள்ள 'ஐபிசி தமிழா' நிகழ்வில் நடைபெறவுள்ள மாபெரும் இரண்டு இறுதிச் சுற்றுக்களில் ஒன்றான 'நாட்டியதாரகை'யின் நடுவர்களில் ஒருவராக தாயகத்திலிருந்து வந்து கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நாடுகடந்து வந்து சிறப்பிப்பதில் தான் மிகவும் ஆர்வமாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீமதி கிருஷாந்தி பல பெயர்சொல்லும் மாணவர்களை தாயகத்திலும் புலம் பெயர் மண்ணிலும் உருவாக்கித் தந்துள்ளதோடு தனக்கென்று நாட்டியத்தில் தனி இடம் பிடித்திருப்பவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க