சுவிசை நோக்கி பிரபல இசைக் கலைஞர்கள்! சுவிஸ் களைகட்டல் ஆரம்பம்!!

  • Prem
  • December 04, 2018
112shares

ஐபிசி தமிழ் ஊடகக்குழுமத்தின் மற்றுமொரு பிரமாண்டமான நிகழ்வான ஐபிசி தமிழா சுவிற்சலாந்து 2018– எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை சுவிற்சலாந்தின் பிறைபோர்க் பிராந்தியத்தின் போரம் பிறைபோர்க் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடுவர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் சுவிற்சர்லாந்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

ஐபிசி தமிழா சுவிற்லாந்து 2018இல் இரு பெரும் போட்டிகளான தங்கத் தமிழ்க் குரல் இளையோருக்கான பாடல் போட்டி மற்றும் நாட்டியதாரகை பரத நாட்டியப் போட்டி ஆகிய நிகழ்வுகளுக்கான இறுதிச்சுற்றுக்கள் நடைபெறவுள்ளன.

இதில் தங்கத்தமிழ்க் குரல் இளையோர் பாடல் போட்டியின் நடுவர்களில் ஒருவரான பாலக்காடு ஸ்ரீராம் சுவிற்லாந்தை இன்று மாலை சென்றடைந்துள்ளார். இவரோடு பின்னணி இசை வழங்குவதற்காக இசைக் கலைஞர்களும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பாடல் போட்டியின் இறுதிச்சுற்றுக்காக புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகியவற்றில் இருந்து பங்கெடுத்த பல இளைய போட்டியாளர்களில் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க