புலம்பெயர் ஈழத் தமிழர்களே தமிழை வாழவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்! பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் புகழாரம்!!

290shares

தமிழை இன்று வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்தான் என்று கூறுகிறார் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ஜிப்ரான்.

தமிழ்நாட்டில் பலரும் 'தங்கிலீஸ்' பேசிக்கொண்டிருக்க, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் சுத்தமான தமிழ் பேசுவது தன்னை மிகவும் கவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகைசூடவா', 'விஸ்வரூபம்-2', 'ராட்சஸன்' உட்பட பல திரைப்படங்களுக்கு பின்னணி இசை வழங்கி தென் இந்தியத் திரை உலகில் இன்று அதிகம் பேசப்படுகின்ற ஒரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜிப்ரான்.

ஐரோப்பா மற்றும் கனடா தேசங்கள் தழுவிய ரீதியில் IBC- தமிழ் நடாத்தி வருகின்ற 'தங்கத் தமிழ் குரல்' பாடல் போட்டியின் இறுதிப் போட்டி, பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் நடுவர்களாகக் கலந்துகொள்ள, எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி சுவிட்சலார்ந்து 'போரம் பிரைபூர்க்' மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொள்ள உள்ள ஜிப்ரான் 'IBC தமிழா' நிகழ்ச்சி தொடர்பாக IBC-தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் செவ்வி:

இதையும் தவறாமல் படிங்க