பகைவனுக்கு அருள்வாய்! ஒலிக்கப்போகும் ஈழத்தமிழ்க்குரல் எது?

  • Prem
  • December 07, 2018
65shares

திரை இசையமைப்பில் பிரபலமான இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடப்போகும் முதலாவது ஈழத்துப்பாடகர் யார்?

இந்த புதிருக்குரிய விடை நாளை (டிசம்பர் எட்டாம் திகதி) இரவு சுவிற்சலாந்தின் ForumFribourg அரங்கில் இடம்பெறும் ஐபிசி தமிழா நிகழ்வில் கிட்டப்போகிறது.

இதனால் ஈழத்தமிழருக்கு கிட்டப்போகும் இந்தவிடையை கிட்டநின்று பார்ப்பதற்கு தங்கத்தமிழ்க்குரல் இளையோர் நிகழ்வுக்கு அனைவரையும் வருகை தரும்படி ஐபிசி தமிழ் அழைக்கிறது.

தனது இசையில் பாடப்போகும் அந்த திறமைசாலியைத் தெரிவு செய்யும் போட்டியின் நடுவராகசெயற்பட தமிழகத்திலிருந்து ஜிப்ரான் வருகை தந்துவிட்டார்.

வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தனது திரை இசைப்பயணத்தை ஆரம்பித்த ஜிப்ரான், இசையுடன் தான் செலவுசெய்யும் ஒவ்வொரு நொடியும் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தனது இசையில் வெளிவரவுள்ள பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை தங்கத்தமிழ்க் குரல் இளையோர் போட்டியின் வெற்றியாளர் பெறுவார் என்றும் அவர் உறுதிஅளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...