சுவிஸ் தூதுவர் மீள அழைக்கப்படவில்லை! உறுதிப்படுத்தியது சுவிஸ் தூதரகம்!!

37shares

சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க, இலங்கைக்கான சுவிஸ் தூதுவரை உடனடியாக அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இன்று சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கை, சுவிஸ் தூதரகத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கத்தை சிரமத்துக்குள்ளாக்கும் நோக்கத்தில் குறித்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளதாகவும், இந்நிலையில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவரை உடனடியாக அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று சுவிஸ் தூதராலயம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் தொடர்ந்து இலங்கைலேயே இருப்பதாகவும், அவர் தனது பணிகளை செய்து வருவதாகவும் சுவிஸ் தூதரகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...