சுவிஸில் அகதி இளைஞர்களின் வெறிச்செயல் : பதறியடித்து எழுந்த மக்கள்!

409shares

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கி வெடியோசையால் மக்கள் அச்சமடைந்து தூக்க கலக்கத்திலிருந்து விடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஜெனீவா நகரில் உள்ள Eaux-Vives பகுதியில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளை மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதன்போது மக்களின் தூக்க கலக்கத்தை கலைக்கும் வகையில் துப்பாக்கி சத்தம் கேட்டது.இதனையடுத்து தூக்கத்திலிருந்த மக்கள் பதறியடித்து எழுந்தனர்.இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து 26 வயதான இளைஞரை கைது செய்தனர்.இதில் பொலிஸாரை கண்டதும் மூவர் மாயமாகியதாகவும் எனினும் பொலிஸார் நடத்திய தேடுதலில் ஒருவர் அகப்பட ஏனைய இருவரும் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரியவருகிறது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கைதான இளைஞன் உட்பட மூவரும் அகதிகள் என தெரியவந்துள்ளது.இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி