அதிவேகத்தால் விளைந்த விபரீதம்!

34shares

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அதிவேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி இலங்கை போக்கவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி வீதியில் நின்று கொண்டிருந்த இருவர் மீதும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட முவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த இருவர் மீது அதிக வேகத்தில் வந்த முச்சக்கர வண்டி மோதியதில் பலத்தகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் இன்று அதிகாலை 05.30மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் ஹட்டன் போக்கவரத்து சபையில் பணிபுரியும் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் தொழிலுக்கு தயாரகி வீதியில் காத்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயத்திற்குள்ளான அனைவரும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க