இலங்கையில் இன்று காலை இடம்பெறவிருந்த அதி பயங்கர அனர்த்தம்? ஒன்றையொன்று நோக்கி வேகமாக வந்த ரயில்கள்!

398shares

பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கிடையில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலும் ஒரே புகையிரதப் பாதையில் பயணித்துள்ளமையினால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த பாரிய விபத்து, புகையிரத ஊழியர்களின் செயற்பாட்டினால் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் இரு ரயில்கள் இதே புகையிரதப் பாதையில் பயணித்த நிலையில் தடுக்கப்பட்டு அவ்விடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவதாக புகையிரதத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`