தாயை இழந்த துக்கம் தாளாமல் மகளும் மரணம்!

796shares
Image

பிரித்தானியாவில் தாயார் இறந்த அதே வாரத்தில் அவரது 11 வயது மகளும் இறந்த சம்பவம் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் 11 வயதான Syira Coutain-Harebin. இவரது தாயார் Mary Coutain கடந்த வாரம் திடீரென்று மரணமடைந்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்து முடிந்து உறவினர்களுடன் குடியிருப்பு திரும்பிய அவரது 11 வயது மகள் Syira Coutain திடீரென்று ஆஸ்துமா நோய் அதிகமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி Syira Coutain மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே வாரத்தில் அந்த குடும்பத்தில் இருவேறு துயர சம்பவம் நடந்துள்ளது நண்பர்கள் மற்றும் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி Syira Coutain மிகவும் திறமையானவர் என்றும் அவரது நண்பர்கள் மற்றும் பாடசாலை தோழிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

லண்டனில் Grenfell அடுக்குமாடி குடியிருப்பு தீக்கிரையானபோது Mary Coutain தமது சேமிப்பை நன்கொடையாக அளிக்க முதன் முதலாக முன்வந்தவர் என அவரது நண்பர்கள் பலர் நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க