பிரித்தானியாவில் அதிர்ச்சி! சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை கண்டுபிடிப்பு!!

  • Prem
  • August 22, 2018
279shares

லண்டன் உட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் சஸெக்ஸ் பகுதியில் சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை ஒன்று அதிர்ச்சிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி செய்தியை பிரித்தானியாவின் தேசிய குற்றத்தடுப்பு முகவரமைப்பு தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளது.

சஸெக்ஸில் கெயில்ஷாம் என்ற பகுதியில் தொழிற்கூடங்கள் அமைந்துள்ள இடமொன்றில் வாகனதிருத்தகம் என்ற போர்வையில் இந்தசட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை இயங்கிவந்துள்ளது.

இது குறித்து எப்படியோ புலனாய்வுத்தகவல்களைப் பெற்றகாவற்துறை இந்த இடத்தை அதிரடியாக முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோது அவர்களுக்கு அது ஒரு துப்பாக்கித்தொழிற்சாலையாக இயங்கிய அதிர்ச்சிகரவிடயம் தெரியவந்தது.

இந்த நடவடிக்கையின்போது காவற்துறையினர் தமதுதரப்பில் மின்சாரத்துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பியோட முனைந்த ஒருவரை மடக்கியிருந்தனர்.

இந்த நடவடிக்கையில் சட்டவிரோத துப்பாக்கிகளை தயாரித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலையில் தயாரிக்கபட்ட 30க்கு மேற்பட்ட ஆயுதங்களும் அதற்குரிய ரவைகளும் கைப்பற்றபட்டுள்ளன.

பிரித்தானியாவில் இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத ஆயுததொழிற்சாலை இங்குவது அரிதாக இடம்பெறும ஒரு விடயமென்பதால் இது ஒரு அதிர்ச்சியான விடயமென தேசிய குற்றத்தடுப்பு முகவரமைப்பு கூறுகிறது.

இதையும் தவறாமல் படிங்க