பிரித்தானிய நஞ்சூட்டல் சூத்திரதாரிகள்! சாதாரண குடிமக்கள் என்கிறார் புட்டின்

  • Prem
  • September 12, 2018
33shares

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கொடிய இரசாயன நஞ்சூட்டல் சம்பவங்களின் சூத்திரதாரிகள் என ஸ்கொட்லண்ட்யாட் காவற்துறை அடையாளப்படுத்திய ரஸ்யர்கள் இருவரும் சாதாரண குடிமக்கள் என ரஸ்ய அரச தலைவர் விளடிமீர் புட்டின் அறிவித்துள்ளார்.

நொவிசோக் இரசாயனத் தாக்குதல் சந்தேக நபர்களாகவும் ரஸ்யாவின் முன்னாள் புலனாய்வாளர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்ட அலக்ஸான்டர் பெத்ரோவ் மற்றும் ருஸ்லான் பொஸிரோவ் ஆகிய இருவர் குறித்தும் ரஸ்ய அரசாங்கம் விசாரணை செய்தபோது இந்த விபரங்கள் தெரியவந்தாகவும் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் உளவாளி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது உலகின் மிகக்கொடிய நொவிசோக் ரசாயனத்தால் கடந்தமார்ச் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத்தாக்குதலுக்கு ரஸ்ய அரசதலைவர் விளடிமீர் புட்டின்தான் பொறுப்பு என பிரித்தானிய குற்றஞ்சாட்டினாலும் கிரெம்ளின் இந்த குற்றச்சாட்டுக்களை உடனுக்குடன் மறுத்துவந்தது.

இந்த நிலையில் கடந்தவாரம் இந்த நஞ்சூட்டல் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக இரண்டு ரஷ்யர்களை அவர்களின் கடவுச்சீட்டுக்களில் உள்ள பெயர்களின் அடிப்படையில் சந்தேக நபர்களாக ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறை அடையாளப்படுத்தியது.

தற்போது இந்தவிடயம் குறித்து வாய்திறந்த விளடிமீர் புட்டின் இவர்கள் குற்றவாளிகள் அல்ல ரஸ்யாவின் கிழக்கு நகரான வலாடிவொஸ்ரொக் பகுதியை சேர்ந்த சாதாரண குடிமக்கள் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் இவர்கள் இருவரினதும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவரும். அவர்களும் பேசுவார்கள் எனவும் புட்டின் சொல்லியிருக்கிறார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!