பிரித்தானிய அரண்மனைத் திருமணம் கோலாகலம்! கலூம் புயலால் அல்லோலம்!!

103shares

பிரித்தானிய இளவரசி யூசினியின் இன்றைய திருமண விழாவுக்கு வந்த அரச குடும்பத்தினரும் உறவினர்களும் கலூம் புயலால் ஏற்பட்ட கடும்காற்றுக்காரணமாக பெரும் சிரமமடைந்தனர்


குறிப்பாக பெண்விருந்தினர்கள் தாம் அணிந்திருந்த ஆடம்பரத்தொப்பிகள் காற்றினால் அள்ளுண்டு செல்வதை தடுப்பதற்கு படாதபாடுபட்டிருந்தனர்.


எலிசபெத் மஹாராணியின் புதல்வர்களில் ஒருவரான இளவரசர் அன்ருவின் இளைய புதல்வி யூசினி தனது நீண்டகால நண்பரான ஜக் புறூக்ஸ்பாங் அவர்களை வின்சோர் கோட்டையில் உள்ள சென்.ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் செய்தார்.


எலிசபெத் மஹாராணி உட்பட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அதேபோல பிரபல பாடகர்கள் பாடகிகள் உட்பட்ட 850 பிரபலமுகங்கள் இதில் கலந்துகொண்டன

கோலாகலத்திருமண விழாவில் அழையா விருந்தாளியாக கலூம் புயல்காற்றும் நுழைந்து கொண்டதால் விருந்தினர்களின் ஆடம்பர உடைகளும் தொப்பிகளும்தான் படாதபாடுபட்டன.

இதையும் தவறாமல் படிங்க