லண்டனில் உள்ள இந்து கோவிலின் சிலைகளைக்கூட விட்டுவைக்காத திருடர்கள்!

51shares

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த 1975 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த கோவிலில் லண்டனில் வாழும் இந்துக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த கோவிலில் இருந்த 3 கிருஷ்ணர் சிலைகள் திடீரென மாயமாகிவிட்டன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் பணம் மற்றும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் வீடியோ பதிவு மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் பித்தளையால் செய்யப்பட்டவை. ஆனால் அவை தங்கத்தினால் செய்யப்பட்டவை என தவறாக கருதி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. உண்மையை அறிந்து அந்த சிலைகளை கொள்ளையர்கள் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என நம்புவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க