பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி நடவடிக்கை! மூவர் கைது!

25shares

பிரித்தானியாவில் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் பிரிவினர், பயங்கரவாதத் தாக்குதல்களோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் லண்டனிலிருந்து 17 வயதானவரும், பாத்திலிருந்த 21 வயதானவரும், போர்ட்ஸ்மத்திலிருந்த 18 வயதானவரும் அடங்குவர்.

சொனேன்க்ரேக் பிரிவு என்று அழைக்கப்படும் - புதிய நாசி குழுவினரின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

பாத், லண்டன், போர்ட்ஸ்மத் மற்றும் லீட்ஸ் ஆகிய நான்கு இடங்களிளில் உள்ள இவர்களின் உடமைகள் மீதான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகிழக்கு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க