தமிழக காவல்துறையை போன்றே சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறிய பிரிட்டன் பொலிஸ்!

54shares

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான, பிலிப் கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி இரண்டு நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம், 'சீட் பெல்ட்' அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து காரில் சென்றுள்ளார்.

அதை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதுபற்றி, பிலிப்பிடம் எடுத்து கூறியுள்ளார்.

சீட் பெல்ட், கெல்மெட் அணிவது நமது பாதுகாப்புக்காக என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

அத்துடன் அண்மையில் வெளிவந்த நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் தோன்றும் காட்சிகளில் சீட் பெல்ட், கெல்மெட் அணிந்து நடித்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விளிப்புணர்வூட்டியமை பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விஸ்வாசம் படத்தை பார்த்த சென்னை துணை ஆணையாளர் விஸ்வாசம் படக்குளுவினரை வரவற்று தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க