வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கும் அச்சுறுத்தல்

227shares

பிரித்தானிய தலைநகர் இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர்நீதிமன்றிற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்காஅரசின் விசுவாசியொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றில்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்து தமிழர்களுக்குகொலை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ளபிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் பாதுகாப்புஆலோசகருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்றைய தினம் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில்இடம்பெற்ற போதே பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிநீதிமன்றில் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஆதரவு தெரிவித்து தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திற்கு வந்துசெல்லும் சிறிலங்கா அரசின்விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அமல் அபேவர்தனவை வெஸ்ட்மினிஸ்டர்தலைமை நீதவான் எம்மா ஆர்படநொட் அழைத்து எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை நோக்கி “கழுத்தை அறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்குஎதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்திருந்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் ஜனவரி மாதம்அவரை குற்றவாளியாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்மார்ச் 15 ஆம் திகதியான இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, பிரிகேடியர்சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கு விசாரணைக்குமுன்னதாக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் கவனத்தில்எடுத்துக்கொள்ளவில்லை மன்றிற்கு எடுத்துரைத்தார்.

இந்தமுறைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மே மாதம் ஏழாம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தவெஸ்ட்மினிஸ்டர் பிரதான நீதவான் எமா ஆரபன்நொட், முறைப்பாடைபதிவுசெய்த தரப்பின் சாட்சியாளர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டுவிசாரணை இடம்பெறும் தினத் திரைக்குப் பின்னால்இருந்து சாட்சியமளிக்க அனுமதித்தார்.

நீதிமன்றகட்டத்திற்குள் இருந்த சாட்சியாளர்களின் நிழல்படங்களை எடுத்ததாக வழக்கைத்தொடர்ந்தவர்களின் சட்டத்தரணி நீதவானிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து, குறித்தசிங்கள நபரான அமல் அபேவர்தன நீதவானால் அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுவிடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் தொகை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைகுறிப்பிடும் எண்ணிக்கை முற்றிலும் தவறானது என்று கூறிவரும் பிரித்தானியபிரபுக்கள் சபை உறுப்பினர் நேஸ்பி பிரபு, வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதவானால்எச்சரிக்கப்பட்ட அமல் அபேவர்தனவுடன் வெளியேறியதை காணக்கிடைத்து.

இதன்போது சிறிலங்காவிற்கு எதிரான போர் குற்றங்களைநிராகரிக்கின்றீர்களா என எமது ஊடகவியலாளர் வினவிய போது, நேஸ்பிபிரபு ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்றார்.

இதேவேளை இன்றைய தினமும் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியில் திரண்டிருந்த புலம்பெயர்தமிழர்கள், புலிக்கொடிகளை ஏந்திக்கொண்டு, “கழுத்தைஅறுக்கும்” சைகையை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தப்பிக்க இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்க சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்துஅங்கு வந்த லண்டன் பொலிசாரிடம், புலிச் சின்னம் பொறிக்கப்பட்டகொடிகள் தமிழ் மக்களின் தேசியக் கொடிகள் என தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் புலம்பெயர்தமிழர்களுக்கு புலிக்கொடிகளுடன் தொடர்ந்து போராட்டத்தை நடத்த இடமளித்துவிட்டுஅங்கிருந்து நகர்ந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க