இறுதி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தெரேசா மே! நான்கு நாட்களில் பிரித்தானியா வெளியேற வாய்ப்பா?

  • Jesi
  • April 09, 2019
57shares

ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இறுதிநிமிடத்தில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்தப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரக்ஸிட்டை தாமதப்படுத்துமாறு ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே கோரிக்கை விடுக்கவுள்ளார்.

ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்கலை பேர்லின் நகரில் வைத்து சந்தித்து அவர் இந்தக் கோரிக்கையை விடுக்கவுள்ளதுடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை பாரிஸ்சில் வைத்து தெரேசா மே சந்தித்து தமது கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நாளை புதன்கிழமை நடைபெறும் அவரச மாநாட்டில், பிரக்ஸிட்டை தாமதப்படுத்துவது குறித்த வாக்கெடுப்பில் அனைத்து உறுப்பு நாடுகளும் வாக்களிக்கவுள்ளன.

இதனிடையே பிரக்ஸிட் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் பிரித்தானியாவின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமெண்ட் மற்றும் நிழழ் அமைச்சர் ஜோன் மெக் டொனெல் ஆகியோருடன் பேச்சுவார்த்தையாளர் குழு இணையவுள்ளது.

பரந்துபட்ட அளவில் பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் பிரித்தானியா வெளியேறுகின்றது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் இணக்கம் காணப்பட்ட தெரேசா மேயின் உடன்படிக்கையை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று தடவைகள் நிராகரித்திருந்தனர்.

இந்த நிலையில் பிரக்ஸிட்டை தாமதப்படுத்துவதற்கு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!