பிரித்தானிய பிரதமர் வாயிற்தலத்திற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கவனயீர்ப்புப் போராட்டங்கள் !!

110shares

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு நீதிகோரி பிரித்தானிய தலைநகர் இலண்டனில் இன்றைய தினம் ஆறாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இம்முறை பிரித்தானிய தலைநகர் இலண்டனிலுள்ள பிரித்தானிய பிரதமர் இல்லமான பத்தாம் இலக்க டவுனிங் வீதியில் மே மாதம் 11 ஆம்திகதி சனிக்கிழமை முதல் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானிய பிரதமர் வாயிற்தலத்திற்கு முன்னால் நடைபெற்று வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாவது நாளான இன்று தமிழர்களின் அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் வேண்டி அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

வழமைபோல் காலை10 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடரினை திரு தெய்வேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்காக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ உணர்வாளர்களான சுஜீவன்,பிரதீபன், பாலகிருஷ்ணன், சண்முகநாதன், பாலகுமரன், வெற்றிக்குமரன், அருளிசா ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதையும் தவறாமல் படிங்க