பிரித்தானியாவில் பயணச் சீட்டின் விலை அதிகரிப்பு! மாற்றத்தைக் கொண்டுவர பயணிகள் குழுக்கள் கோரிக்கை!

37shares
Image

பிரித்தானியாவில் ரயில் பயணச் சீட்டின் விலை அதிகரிப்பு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜூலை மாதத்திற்கான சில்லறை விலைக் குறியீடு பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு 2.8% ஆக உயரவுள்ளது.

இந்த அதிகரிப்பானது, பல பயணிகளுக்கு வேலைக்குச் செல்வதற்கான வருடாந்த செலவில் கிட்டத்தட்ட 100 பவுண்டுகளால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில்லறை விலைக் குறியீடு என்பது இனி ஒரு தேசிய புள்ளிவிவரமாக கொள்ளப்பட முடியாததால், பயணச் சீட்டின் விலைகள் கணக்கிடப்படும் வழியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என பயணிகள் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையும் தவறாமல் படிங்க