லண்டன் தாக்குதலில் பயங்கரவாத தொடர்பு...? பிரித்தானிய பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!

36shares

பிரித்தானியத் தலைநகர் லண்டனின் மத்திய பகுதியில் உள்ள லண்டன் பிறிட்ஜில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் லண்டன் பிறிட்ஜ் பகுதி முற்றாக காவற்துறையின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

.பிரித்தானியத் தலைநகர் லண்டனின் மத்திய பகுதியான சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக நடமாடும் பிரதேசமாக இருந்துவரும் லண்டன் பிறிட்ஜ் பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் லண்டன் பிரிஜ்ஜில் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், கத்திக்குத்து நடத்திய நபரை பிடிப்பதற்காகவே காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஏராளமான காவற்துறையினர் குவிக்கப்பட்டு பெரும் முற்றுகை நடவடிக்கையொன்றும் அங்கு மேற்கொள்ளபட்டது.

அந்தப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பாக காவற்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் ஒருவரை சுற்றிவளைத்திருந்த பலர் அந்த நபரை தாக்கிக்கொண்டிருந்த நிலையில் அங்கு துப்பாக்கி வேட்டுகளும் தீர்கப்பட்டுள்ளன.

அதற்குப் பின்னரே கத்தியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த காவற்துறையினர் கத்திக்குத்தை நடத்திய நபரை சுட்டு பிடித்துள்ளனர்.

முதலில் அந்த நபர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் லண்டன் பிரிஜ் பகுதியில் உண்மையில் என்ன நடந்தது என்ற விபரங்களை காவற்துறை வெளியிடாததால் பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது. தற்போது இன்றைய சம்பவம் பயங்கரவாத

தாக்குதல் சம்பவமாக கருதியே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரும் லண்டன் பிரிஸ் பகுதிக்கு விரைந்து தமது தரப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை லண்டன் பிரிஸ் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாக லண்டன் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு யூன் 3 ஆந் திகதியன்று லண்டன் பிறிட்ஜ் பகுதி மற்றும் பரோ சந்தைப் பகுதியில் ஐ. எஸ் அமைப்பின் ஆயுததாரிகள் மூவர் நடத்திய தாக்குதலில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 48 பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய மூவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி சூட்டு காணொளி...

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!