லண்டனில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி!

4shares

கடந்த வெள்ளியன்று உஸ்மான் கான் என்ற 28 வயதான நபர் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரும் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர்களான 25 வயதான ஜக் மெரிட் மற்றும் 23 வயதான சாஸ்கியா ஜோன்ஸ் ஆகியோரென அறிவிக்கபட்டது.

இதனையடுத்து பலியான இருவருக்கும் இன்று லண்டன் நகரிலும் கேம்ரிட்ஜ் நகரிலும் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதில் குறித்த மாணவர்களின் குழும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

லண்டன் நகரில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் லண்டன் நகர முதல்வர் சாதிக்கான் ஆகியோர் பங்கெடுத்தனர்.

கடந்த வெள்ளியன்று கேம்ரிட்ஜ் பல்கலைக்கழம் ஒழுங்கு செய்த சிறை ககைதிகளின் மறுவாழ்வு குறித்த மாநாடு ஒன்றில் பங்கெடுக்க சென்ற முன்னாள் கைதியான உஸ்மான் கான. நடத்திய இந்த தாக்குதலால் பல்கலைக்கழக சமுகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையே பிரித்தானியாவில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் களத்தின் பரப்புரைக்களத்திலும் இந்த பயங்கரவாததாக்குதல் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

இந்தச்சம்பவத்துக்கு ஆளும் கென்சவேட்டிவ்கட்சியின் பாதுகாப்புத்துறையில் மேற்கொண்ட செலவீன குறைப்பு நடவடிக்கைகளே காரணமென எதிர்க்கட்சியான தொழிற்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் பயங்கரவாத குற்றத்தில் தண்டனைபெற்றவர்களை அவர்களது தண்டனைக்காலத்துக்கு முன்னர் சிறையில் இருந்து விடுதலை பெறும்வண்ணம் முன்னைய தொழிற்கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ததால் தான் இவ்வாறு நடைபெற்றதாக கென்சவேட்டிவ்கட்சி திருப்பித்தாக்கியுள்ளது.

லண்டன் பிரிட்ஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் மூவர் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு