பிரித்தானியாவில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்

  • Dias
  • December 06, 2019
336shares

பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி நிழல் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஜோன் மெக்டொனால்ட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடந்தது.

பிரித்தானிய தொழிலாளர் கட்சி தலைமையகத்திற்கு எதிரில் பிரித்தானியாவில் வாழும் சிங்கள மக்கள் சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழ் வாக்குகளை தொழிலாளர் கட்சிக்கு ஈர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி என்று போராட்டக்காரர்கள் கூறினார்.

ஜோன் மெக்டொனால்ட், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், தமிழ் மக்களின் இனப்படுகொலை, தமிழ் மக்களை சித்திரவதை செய்வது, சமூக அநீதி மற்றும் மனித உரிமை மீறல் அனைத்தையும் விசாரிப்பதாக உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையுடனான முதலீடுகள் அநீதி மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதில் இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், எசெக்ஸ் கவுண்டி ஐல்போர்ட் வடக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பி வெஸ்லி ஸ்ட்ரைன், வெளியிட்ட அறிக்கைக்கும் சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்