பிரித்தானிய தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது உறுதி

37shares

பிரித்தானியாவில் இன்று இடம்பெற்ற பொதுத்தேர்தல் வாக்களிப்பு இன்றிரவு 10 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து எக்ஸிற்போல் எனப்படும் வாக்களிப்புக்குப்பின்னான கருத்துக்கணிப்பு முடிவுகளில் கென்சவேட்டிவ்கட்சி 368 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஜெரமிகோர்பினின் தொழிற்கட்சி 191 ஆசனங்களை மட்டுமே பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சி 13 ஆசனங்களையும் எஸ்.என்.பி எனப்படும் ஸ்கொட்லாந்து தேசியகட்சி 55 ஆசனங்களை பெறும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது .

இரவு 10 மணிக்கு வாக்களிப்பு முடிந்த பின்னர் தற்போது வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளன. இரவிரவாக முடிவுகள் அறிவிக்கபட்டு நாளை அதிகாலை உண்மையான முடிவுகளை தெரியக்கூடியதாக இருக்கும்.

ஆளும் ,கென்சர்வேட்டிவ், கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...