அரசபட்டங்களை துறக்கும் ஹரி கனடாவில் மனைவி மற்றும் மகனுடன் இணைந்தார்

179shares

அரச பட்டங்களை துறக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹரி, கனடாவுக்கு சென்று அங்கு மனைவி, மகனுடன் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவிகளை துறக்கின்றனர். இதையொட்டி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அரச குடும்பத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தை சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஹரி, மேகன் தம்பதியரின் முடிவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக எந்தவொரு விழாவிலும் இளவரசர் ஹரி பங்கேற்க முடியாது. அரச குடும்ப கடமைகள் எதையும் செய்யவும் மாட்டார்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகனும், பிறந்து 8 மாதமே ஆன மகன் ஆர்ச்சியும் கனடாவில் வான்கூவர் தீவில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இளவரசர் ஹரியும் நேற்று கனடா சென்றார். அவர் வான்கூவரில் மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியுடன் சேர்ந்து கொண்டார். இங்கு சில காலம் அவர்கள் இருப்பார்கள் என தெரிகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் இளவரசர் ஹரி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனை சந்தித்து பேசினார். இங்கிலாந்து-ஆபிரிக்கா உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்று பேசினார். இது அவர் இங்கிலாந்து இளவரசர் என்ற தகுதியில் இறுதியாக பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அறக்கட்டளை விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். எதற்காக அரச குடும்ப கடமைகளை துறக்கிறார் என கோடிட்டு காட்டுகையில், அதைத் தவிர வேறு வழி எதுவும் தனக்கு இல்லை என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

loading...