மறுசீரமைக்கப்பட்டது அமைச்சரவை! பலரை பதவியிலிருந்து தூக்கிய பிரித்தானியப் பிரதமர்

76shares

பிரித்தானியாவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஆணை மிக எளிதாக வந்து சேர்ந்தது.

இந்நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னரான அமைச்சரவை மறுசீரமைப்பை அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து, பல அமைச்சர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், புதிய அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் வடஅயர்லாந்து அமைச்சரான ஜூலியன் ஸ்மித் மற்றும் வீடமைப்பு செயலாளரான எஸ்தர் மக்வி வர்த்தக செயலாளரான அன்ட்றியா லீட்ஸ், போக்குவரத்து அமைச்சரான நுஸ்ரத் கானி, கல்வி அமைச்சரான கிறிஸ் ஸ்கிட்மோர் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சிரேஷ்ட அமைச்சர்களான சஜித் ஜாவத், டொமினிக் ராப் மற்றும் பிரீதி பட்டேல் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவையிலான பெண் உறுப்பினர்கள் தொகையிலும் குறைப்பு செய்யப்படமாட்டாது என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி