லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் இடம்பெற்ற தற்கொலை!

164shares

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லண்டன் மருத்துவமனையில், இளம் செவிலியர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றது.

195 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது அதிலும் குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லண்டன் மருத்துவமனையில், இளம் செவிலியர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள கிங் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 20 வயதான இளம் செவிலியரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

திங்கள்கிழமை மாலை 5.36 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) பொலிசார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் செவிலியர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும், பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 8 நோயாளிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகள், லண்டனில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் பதிவாகியுள்ள 8,077 நோயாளிகளில் 2,872 பேர் லண்டனில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!